Jul 21, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தில் உலகக் கிண்ண மோதல்: ஜோகூரில் 15 வயது சிறுவன் உட்பட 12 பேர் அதிரடி கைது
தற்போதைய செய்திகள்

உணவகத்தில் உலகக் கிண்ண மோதல்: ஜோகூரில் 15 வயது சிறுவன் உட்பட 12 பேர் அதிரடி கைது

Share:

ஜோகூர்பாரு, தாமான் டாயா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 வயது சிறுவன் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாத் கூறுகையில், இன்று அதிகாலை 5:40 மணியளவில் இந்த வன்முறைச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தாமான் செத்தியா இண்டா பகுதியில் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பது போலீஸ் சோதனையில் தெரியவந்துள்ளது. ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒளிபரப்பப்பட்ட போது இந்த மோதல் வெடித்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பான 2 நிமிடம் 36 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சிகளும் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related News