May 21, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சித்ரவதை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்தார்

Share:

கோலாலம்பூர், பன்டார் துன் ரசாக் - கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆறு வயது சிறுமி ஒருவர் குழந்தை பராமரிப்பாளரால் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை, மதியம் 3:40 மணியளவில் அச்சிறுமி சுயநினைவின்றி துன்கு அசிசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

பின் அச்சிறுமி மருத்துவ பலனின்றி இறக்கபட்டதாகவும் அந்த வீட்டின் குழந்தை பராமரிப்பாளரின் துன்புறுத்தலுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாகி இருப்பதை நம்பப்படுவதாக அறிக்கையில் ஏசிபி சாம் ஹலிம் விவரித்திருந்தார்.

மருத்துவ பரிசோதனைக்கு அச்சிறுமியின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தை பற்றி மேலும் போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும் இதுக்குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் செராஸ் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறும் ஏசிபி சாம் ஹலிம் கேட்டுக் கொண்டார்.

Related News