கோலாலம்பூர், ஜூலை.22-
மைகியோஸ்க் சேவைத் தளம் தொடர்பில் பல்வேறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ள தரப்பினர், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் பணியாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
மைகியோஸ்க் சேவைத் தளம் பொதுமக்களுக்கும், வணிர்கர்களுக்கும் உதவும் வகையில் பலதரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
மைகியோஸ்க் சேவை, 100 விழுக்காடு திருப்திகரமாக உள்ளது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் பலவீனத்தை நிர்வாக ரீதியில் மேம்படுத்துவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரின் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் தாமே களம் இறங்கி, அதன் சேவைத் தரத்தை நேரில் பார்வையிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.








