Nov 6, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்புக்கு வீட்டுக்காவல் உத்தரவை வழங்கியது உயர்நீதிமன்றம்: காஜாங் சிறையிலிருந்து இன்றே விடுவிக்கப்படலாம் என வழக்கறிஞர் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்புக்கு வீட்டுக்காவல் உத்தரவை வழங்கியது உயர்நீதிமன்றம்: காஜாங் சிறையிலிருந்து இன்றே விடுவிக்கப்படலாம் என வழக்கறிஞர் தகவல்

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கை வீட்டுக்காவலில் வைக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவரது வழக்கறிஞரான ஃபார்ஹான் ஷாஃபி தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவானது, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல், ஊழல் வழக்கில், நஜிப் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் காஜாங் சிறைச்சாலையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நஜிப் இன்றே காஜாங் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஃபார்ஹான் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் அபராதத்தைச் செலுத்துவதற்குத் தேவையான நிதியை, செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நன்கொடை திரட்டும் இயக்கத்தின் மூலம் திரட்டியுள்ளதாகவும், அந்தத் தொகையைச் செலுத்திவிட்டதாகவும் அம்னோ இன்று அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, ஃபார்ஹான் மற்றும் நஜிப்பின் சிறப்பு அதிகாரி லுட்ஃபி அஸார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் கட்டணச் செலுத்தும் கவுன்ட்டருக்குச் சென்ற பின்னர், குற்றவியல் வழக்குப் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றனர்.

அதேவேளையில், நஜிப்பின் கோலாலம்பூர் இல்லத்தில் ஊடகவியலாளர்கள் இன்று காலை முதல் குவிந்துள்ளனர்.

இதனால் அங்கு போலீசார் அங்கு பலத்த பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →