Nov 6, 2026
Thisaigal NewsYouTube

போதைப் பொருள் கும்பல் மலேசியாவை வழித்தடமாகப் பயன்படுத்தத் திட்டம் - உள்துறை அமைச்சு எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப் பொருள் கும்பல் மலேசியாவை வழித்தடமாகப் பயன்படுத்தத் திட்டம் - உள்துறை அமைச்சு எச்சரிக்கை

புவியியல் அமைவிடம் மற்றும் விரிவான போக்குவரத்து இணைப்புகள் காரணமாக, அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களானது மலேசியாவை கடத்தல் வழித்தடமாகப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

போலீசாரின் உளவுத் தகவல்கள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் அடிப்படையில், அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு மலேசியாவை வழித்தடமாகப் பயன்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலேசியாவின் விமானம், தரை மற்றும் கடல் வழிப் போக்குவரத்து இணைப்புகளை அனைத்துலக குற்றக் கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்றும் சைஃபுடின் இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.

இதன் மூலம் போதைப்பொருட்களை மலேசியாவுக்குள் கொண்டு வந்து உள்நாட்டுச் சந்தையில் விநியோகிப்பதுடன், பிற நாடுகளுக்கும் கடத்திச் செல்ல வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகக் போலீசார் உளவுத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
8 மாதங்களில் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 1.33 லட்சம் சம்மன்கள் - அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

8 மாதங்களில் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 1.33 லட்சம் சம்மன்கள் - அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

நெகிரி செம்பிலானில் முதியவர் உயிரிழந்த சம்பவம்: 3 பேருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

நெகிரி செம்பிலானில் முதியவர் உயிரிழந்த சம்பவம்: 3 பேருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

நஜிப்புக்கு வீட்டுக்காவல் உத்தரவை வழங்கியது உயர்நீதிமன்றம்: காஜாங் சிறையிலிருந்து இன்றே விடுவிக்கப்படலாம் என வழக்கறிஞர் தகவல்

நஜிப்புக்கு வீட்டுக்காவல் உத்தரவை வழங்கியது உயர்நீதிமன்றம்: காஜாங் சிறையிலிருந்து இன்றே விடுவிக்கப்படலாம் என வழக்கறிஞர் தகவல்

தீபாவளிக்கு முன்பாக 80%க்கும் அதிகமான டாக்ஸி ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதியுதவி

தீபாவளிக்கு முன்பாக 80%க்கும் அதிகமான டாக்ஸி ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதியுதவி

தெலுக் இந்தான் ஆடவர் வெட்டிக் கொலை: மேலும் 3 பேர் கைது

தெலுக் இந்தான் ஆடவர் வெட்டிக் கொலை: மேலும் 3 பேர் கைது

இனி வெளிநாட்டு மோசடிக் கும்பல்கள் மீதும் சட்ட நடவடிக்கை: இணைய குற்ற மசோதாவிற்கு புக்கிட் அமான் வரவேற்பு

இனி வெளிநாட்டு மோசடிக் கும்பல்கள் மீதும் சட்ட நடவடிக்கை: இணைய குற்ற மசோதாவிற்கு புக்கிட் அமான் வரவேற்பு