நெகிரி செம்பிலான் மாநிலம், ராசா ஜெயா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதியவர் ஒருவர், உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தில், சந்தேக நபர்கள் மூன்று பேர், ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 28 முதல் 34 வயதிற்குட்பட்ட நான்கு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் யாத்திம் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஓர் ஆடவர் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் நான்கு பேர் அடங்குவர்.
இந்நிலையில், அவர்களில் மூன்று சந்தேக நபர்களை, வரும் நவம்பர் 12-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக முஹமட் யாத்திம் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.








