ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.21-
ஜார்ஜ்டவுன், ஜாலான் பர்மாவில் திடீரென பள்ளம் உருவானதால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பே இந்தப் பள்ளம் உருவாகக் காரணம் என மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் H’ng Mooi Lye தெரிவித்தார். உடனடி நடவடிக்கையாக, காவற்படையினர் அப்பாதையை மூடி, போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பி விட்டனர். இந்தத் திடீர் பள்ளத்தால் ஏற்பட்ட பதற்றம் அடங்கியுள்ள நிலையில், தற்போது ஒரு வழித்தடம் மட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.








