கூச்சிங், அக்டோபர்.27-
ஓர் இந்து ஆலயத்தில் மூன்று தெய்வச் சிலைகளைத் திருடிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இரண்டு மாத சிறைத் தண்டனையும், ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
56 வயது தயாளன் என்ற சிவபிரகாசம் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் Nursyaheeqa Nazwa, சிறைத் தண்டனை விதித்தார்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சரவாக், கூச்சிங், ஜாலான் ஹோஸ்பிட்டல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோவியில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








