Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சுதந்திர சதுக்கத்தில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்
தற்போதைய செய்திகள்

சுதந்திர சதுக்கத்தில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

Share:

பாலஸ்தீன மக்களின் உரிமைக் குரலாக, இன்று கோலாலம்பூர் டத்தாரன் மெர்டெக்காவில் , பல்லின மக்கள் ஒன்றுக் கூடி ,தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை என்ற கருப்பொருளை ஏந்திக் கொண்டு Viva Palestina Malaysia (VPM) மற்றும் MyCARE இயக்கங்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதி பேரணியில், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் கலந்து கொண்டுள்ளனர் என அந்த ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சிரியா, துனிசியா, எகிப்து, ஸ்பெயின், லிபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சார்ந்த வெளிநாட்டவர்களும் காலை தொடங்கி டத்தாரன் மெர்டேக்காவில் குலுமி தங்களின் ஆதரவை வழங்கி உள்ளனர்.

அதே சமயத்தில், பல்லூடகம் மற்றும் இலக்கியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில், பிகே ஆர் கட்சியின் துணைத் தலைவர் நூரூல் இசா அன்வாரும் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related News