Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பேங்க் நெகாராவின் SME SRF திட்டம்: PMKS நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி கடனுதவி
தற்போதைய செய்திகள்

பேங்க் நெகாராவின் SME SRF திட்டம்: PMKS நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி கடனுதவி

Share:

கோலாலம்பூர், மே.17-

பேங்க் நெகாரா மலேசியா அறிமுகப்படுத்தியுள்ள 5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான SME SRF திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள PMKS நிறுவனங்கள் மே 15 முதல் குறைந்த வட்டி நிதியுதவிக்காக விண்ணப்பிக்கலாம்.

தகுதியான நிறுவனங்களுக்கு 7 லட்சத்து 50,000 ரிங்கிட் வரை ஆண்டிற்கு 3.7 விழுக்காடு வட்டியில் நிதி பெற முடியும்.

Bank Kerjasama Rakyat Malaysia Berhad மற்றும் SME வங்கி உள்ளிட்ட 18 நிதி நிறுவனங்கள் மூலம் இந்த உதவி வழங்கப்படுகின்றது.

இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை அல்லது 5 பில்லியன் ரிங்கிட் நிதியானது முழுமையாகப் பயன்படுத்தப்படும் வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு தொழில்களுக்கு உதவியாக, விண்ணப்பம் மற்றும் நிதி வழங்கும் செயல்முறைகளை வேகப்படுத்துமாறு KUSKOP நிதி நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வணிக நிதியளிப்பு உத்தரவாத நிறுவனமான SJPP வழங்கும் கூடுதல் 5 பில்லியன் ரிங்கிட் உத்தரவாத நிதியுடன், PMKS துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 60 பில்லியனாக உயர்ந்துள்ளது.

Related News

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு