Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை

கிள்ளான்,செப்டம்பர் 26-

சர்ச்சைக்குரிய Global Ikhwan Holdings நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்த சமூக மற்றும் கல்வி மையத்தில் மூன்று மாணவர்களின் நெஞ்சின் மீது கால் முட்டியால் அழுத்தியதுடன், அந்த மாணவர்களை பிரம்பினால் அடித்த குற்றத்திற்காக அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

23 வயது முஹம்மது பாரூர் ரஹீம் ஹிஸாம் என்ற அந்த ஆசிரியர், நீதிபதி நோரிடா அடம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அந்த ஆசிரியர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொள்வதாக மெல்லிய குரலில் கூறினார்.

கடந்த ஜுன் மாதம் கிள்ளான், புக்கிட் ராஜா -வில் உள்ள Global Ikhwan Holdings மையத்தில் 10 வயதுடைய மூன்று சிறார்களை சித்ரவதை செய்து, உடல் ரீதியாக காயப்படுத்தியதாக அந்த ஆசிரியர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை அல்லது 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்