கோலாலம்பூர், ஜூலை.22-
அரச பேராளர் ஒருவரைத் தொடர்புபடுத்தி திருமணம் செய்து கொண்டதாகப் பொய்யான தகவலைப் பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மாது ஒருவர், மனோ நிலை சோதனைக்கு தஞ்சோங் ரம்புத்தான் பஹாகியா மருத்துவமனையில் அனுமதிக்குமாறு இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் புரிந்ததாகக் கூறப்படும் இந்த பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள 43 வயது பெர்சானா அவ்ரில் சொல்லுண்டாவிற்கு எதிராக வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் மனோ நல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ரவிந்தர்ஜிட் கவுர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
அவரின் விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.








