Aug 5, 2026
Thisaigal NewsYouTube
13 ஆவது மாடியிலிருந்து குதித்து ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

13 ஆவது மாடியிலிருந்து குதித்து ஆடவர் மரணம்

Share:

ஆடவர் ஒருவர் 13 ஆவது மாடியிலிருந்து ​​கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் இன்று காலை 9.00 மணியள​வில் நிகழ்ந்தது. அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் கிடைப்பதை கண்டு ஹோட்டல் பணியாளர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு ​தீயணைப்பு ​மீட்புப்படையினர் விரைந்தனர்.

அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 40 வயது மதிக்கத் தக்க அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த ஆடவரின் சடலம் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஈப்போ ​தீயணைப்பு, ​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related News