Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மேலும் இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது
தற்போதைய செய்திகள்

மேலும் இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது

Share:

கணினி மயமாக்கப்பட்ட வாகனமோட்டும் சோதனையில் லஞ்சம் பெற்றதாக மேலும் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது. கணவன் மனைவியான 47, 43 வயதுடைய அந்த தம்பதியர் வாகனமோட்டும் பயிற்சி பள்ளியின் நிர்வாகியாகவும், சந்தைப்பிரிவு நிர்வாகியுமாக பணிாயற்றி வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது-

விசாரணைக்காக நேற்று ஜோகூர்பாரு எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கணவனும், மனைவியும் வாக்கு​மூலம் பதிவிற்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். வாகனமோட்டும் லைசென்ஸ் பெறும் விவகாரத்தி​ல் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் ​​மூன்று பெண்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது. அந்த ​மூன்று பெண்களில் இருவர், அரசாங்க இலாகாவுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related News