Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ரஃபிஸி ரம்லி பதவி விலக வேண்டியதில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஃபிஸி ரம்லி பதவி விலக வேண்டியதில்லை

கோலாலம்பூர், மே.28-

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் தோல்விக் கண்டுள்ள ரஃபிஸி ரம்லி, பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என்று அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின் ஆலோசனை கூறியுள்ளார்.

துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் நூருல் இஸாவிடம் தோல்விக் கண்டால், பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என்று ரஃபிஸி ரம்லி பகிரங்கமாக அறிவித்து இருந்தார்.

அது தேர்தல் வியூகமாகக் கூட இருக்கலாம். ஆனால், ஆற்றலும் திறனும் வாய்ந்த ரஃபிஸி ரம்லி பதவி விலக வேண்டியதில்லை. மாறாக, கட்சிக்குள்ளேயே தனது போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார்.

தனது மகள் நூருல் இஸாவை துணைத் தலைவர் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரஃபிஸி ரம்லியை அன்வார் கழற்றி விட்டுள்ளார் என்று பரவலானக் குற்றச்சாட்டுகள் மத்தியில் , ரஃபிஸி ரம்லி பதவி விலகுவது உசித்தமான செயல் அல்ல என்று கைரி ஜமாலுடின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை