Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: 5 குழந்தைகள் மீட்பு, பாலியல் வீடியோக்கள் சிக்கின!
தற்போதைய செய்திகள்

சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: 5 குழந்தைகள் மீட்பு, பாலியல் வீடியோக்கள் சிக்கின!

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.29-

சிறார் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நம்பப்படும் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட ஐந்து குழந்தைகளை ஜோகூர் போலீசார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் சமூக ஊடகங்கள் மூலம் பாலியல் துஷ்பிரயோகக் கும்பலுக்கு விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்திருக்கிறார்.

கர்ப்பிணிப் பெண்களிடம் குழந்தைகளைத் தத்தெடுப்பதாகக் கூறி 1500 ரிங்கிட் முதல் 3500 ரிங்கிட் வரை வழங்கி, பின்னர் அக்குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பின்னர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டார்க் வெப் மற்றும் சர்வதேச சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு டெலிகிராம் குழுவில் பதிவேற்றியிருக்கின்றனர் என எம். குமார் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) ஜோகூர் காவல் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக ஜோகூர் பாருவில் 29 வயது தொழில்நுட்ப வல்லுநர் கைது செய்யப்பட்டதையடுத்து ஒரு மாத கால நடவடிக்கைக்குப் பிறகு அக்கும்பல் பிடிபட்டிருப்பதாக எம்.குமார் கூறினார்.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசியில் டஜன் கணக்கில் குழந்தை பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறிந்தோம் என்றும் எம். குமார் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 19 வரை ஜோகூர் பாரு, சிலாங்கூர் மற்றும் பினாங்கில் நடைபெற்ற ஓப்ஸ் பெடொ நடவடிக்கையில் 2 உள்ளூர்வாசிகள் மற்றும் 25 முதல் 60 வயதுடைய 8 வெளிநாட்டினர்கள் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிலர் குழந்தைகளின் பராமரிப்பாளர்களாக இருந்ததாக நம்பப்படுகிறது.

Related News