தேசிய நிதிக்குற்றவியல் தடுப்பு மையமான என்.எஃப்.சி.சி ஆலோசனைக் குழு உறுப்பினராக டான் ஸ்ரீ அசாம் பாகி நியமிக்கப்பட்டதை ரத்து செய்யும் அதிகாரம் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு மட்டுமே உள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெளிவுப்படுத்தினார்.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், , அசாம் பாக்கியின் இந்த நியமனக் காலம் வரும் 2027ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் என்றும், அதை ரத்து செய்யும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உண்டு என்றும் குறிப்பிட்டார். மேலும், இதற்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்-மின் தலைமை ஆணையர் பதவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.








