Jul 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!
தற்போதைய செய்திகள்

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

Share:

டாக்சி தொழில் துறையை நவீனமயமாக்க மூன்று புதிய திட்டங்களைப் போக்குவரத்து அமைச்சு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிள்ளான் பள்ளத்தாக்கு பொதுப் போக்குவரத்து திட்டத்தின் வழியே டாக்சி கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன என்றும், ஓட்டுநர்களுக்குப் பயிற்சிகளும் புதிய வாகன நிதியுதவிகளும் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தொடக்கி வைக்கப்பட்ட தேசிய மடானி டாக்ஸி திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் வசதி கட் டமைப்பைக் கொண்ட 'புரோட்டான் எஸ்70' புதிய ரக கார், அதிகாரப்பூர்வ மாதிரி டாக்சி வாகனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் நீண்டகாலமாக இருந்த குத்தகை முறை ஒழிக்கப்பட்டு, ஓட்டுநர்களே வாகனங்களின் முழு சட்டப்பூர்வ உரிமையாளர்களாக மாறுவதற்கு நிதி அமைச்சு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இனிவரும் புதிய டாக்ஸிகள் பாரம்பரிய கூரை விளக்குகளுக்குப் பதிலாக, "ஜிஇடி" என்ற எழுத்துக்களுடன் தொடங்கும் சிறப்புப் பதிவு எண்களைக் கொண்ட நவீன அடையாளத்தைப் பெறும் என்றும் அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்