கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-
மக்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சமூக உதவிகளை வெறும் பணம் வழங்குவதோடு நிறுத்தாமல், வேலை வாய்ப்புகளையும் வணிக நடவடிக்கைகளையும் அதிகரிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அதிரடியாக வலியுறுத்தியுள்ளனர்.
கல்வி, சுகாதாரம் போன்ற எதிர்காலச் சார்ந்த துறைகளில் மானியங்களை அதிகரித்து, மக்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்றார். மாசா எனப்படும் இன்ஸ்திதியுட் மாசா டெப்பான் மலேசியாவின் மெடலின் பெர்மா. வெறும் பண உதவி தற்காலிக நிவாரணமே என்றும், தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்த அவர், ரோன்95 பெட்ரோல் மானிய சேமிப்புகள், விற்பனை சேவை வரி - எஸ்எஸ்டி விரிவாக்கம் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயை இதற்காகப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளார்.








