Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ராமசாமி, ஹடி அவாங் விசாரணைக்கு அழைக்கப்படுவர்
தற்போதைய செய்திகள்

ராமசாமி, ஹடி அவாங் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

Share:

மலாய் பிரகடன நடவடிக்கையை தொடங்கியுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு அரசியல் தலைவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மலாய்க்காரர் பிரகடனம் குறித்த விசாரணைக்காக பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மற்றும் பினாங்கு மாநில துணைத் முதல்வர் டாக்டர் பி. ராமசாமி ஆகிய இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அதன் செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரே நோக்கத்துடன் துன் டாக்டர் மகாதீரால் மலாய் பிரகடனம் தொடங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய டாக்டர் ராமசாமி, விரைவில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News