கோலாலம்பூர், செப்டம்பர்.28-
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா சார்பில் அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பு, பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப்பிடம் நேரடியாக எடுத்துரைக்க ஒரு பொன்னான வாய்ப்பு எனத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார். இந்த உச்சநிலை மாநாட்டை மலேசியா தலைமை தாங்கி நடத்துவதால், காஸாவில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை 11 உறுப்பு நாடுகளின் சார்பாக டிரம்ப்பிடம் தெரிவிக்க முடியும். புறக்கணிப்பதை விடவும், அழைப்பதுதான் கடினம் என்றாலும், நமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க இதுவே சரியான நேரம் என அமைச்சர் கூறியுள்ளார்.








