Sep 15, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் பூனை மணல் எனக் கூறி 80 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் பூனை மணல் எனக் கூறி 80 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி

Share:

சரவாக் மாநிலம் பிந்துலு நகருக்குள் கடத்த முயன்ற 80 கிலோவுக்கும் அதிகமான மெத்தாம்பெட்டமைன் வகை போதை பொருளை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் மதிப்பு சுமார் 40 லட்சம் ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சரவாக் மாநில சுங்கத் துறை இயக்குநர் நோரிஸான் யாஹ்யா கூறுகையில், “பூனைக்கான மணல்” எனக் குறிப்பிடப்பட்ட பார்சல்கள் மீது ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் 12 நாட்கள் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் சோதனை செய்த போது, பார்சல்களுக்குள் மெத்தாம்பெட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கூரியர் சேவை மூலம் இந்த போதைப்பொருளை பிந்துலு பகுதிக்குள் கொண்டு வந்து, பூனை மணல் எனப் பொய்யாகக் குறிப்பிட்டு, போலி பெறுநர் விவரங்களையும் பயன்படுத்தி கடத்தல் கும்பல் தப்பிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 1952, பிரிவு 39B(1) கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம்! புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம்! புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

முகைதீன் யாசின் ஊழல் வழக்கில் ரகசிய ஆவணம் வெளியானதா? எஸ்பிஆர்எம் அதிகாரி போலீசில் புகார்

முகைதீன் யாசின் ஊழல் வழக்கில் ரகசிய ஆவணம் வெளியானதா? எஸ்பிஆர்எம் அதிகாரி போலீசில் புகார்

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அன்வார்

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அன்வார்

கெடாவில் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு

கெடாவில் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு

கூலிமில் குடும்பத் தகராறு விபரீதம்: 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழப்பு; கணவர் காவல்நிலையத்தில் சரண்!

கூலிமில் குடும்பத் தகராறு விபரீதம்: 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழப்பு; கணவர் காவல்நிலையத்தில் சரண்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!