Sep 15, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அன்வார்
தற்போதைய செய்திகள்

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அன்வார்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் பொதுமன்னிப்பு மனுவை கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம், அடுத்த கூட்டத்தில் விவாதிப்பதாக ஒத்திவைத்தது, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்திற்கு உட்பட்ட முடிவு என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்திய பயணத்தை நிறைவு செய்த பின்னர், கேரளாவில் நேற்று மலேசிய ஊடகங்களிடம் உரையாற்றிய அன்வார், சட்டம் மற்றும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் தமது கருத்தைத் தெரிவித்ததாகக் கூறினார்.

அதேவேளையில், மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் எடுக்கப்படும் இறுதி முடிவும் மாமன்னரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் அன்வார் விளக்கமளித்தார்.

முன்னதாக நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டதற்கு அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அன்வார், மன்னிப்பு வாரியத்தின் விதிமுறைகளை முதலில் பாஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம்! புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம்! புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

முகைதீன் யாசின் ஊழல் வழக்கில் ரகசிய ஆவணம் வெளியானதா? எஸ்பிஆர்எம் அதிகாரி போலீசில் புகார்

முகைதீன் யாசின் ஊழல் வழக்கில் ரகசிய ஆவணம் வெளியானதா? எஸ்பிஆர்எம் அதிகாரி போலீசில் புகார்

சரவாக்கில் பூனை மணல் எனக் கூறி 80 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி

சரவாக்கில் பூனை மணல் எனக் கூறி 80 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி

கெடாவில் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு

கெடாவில் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு

கூலிமில் குடும்பத் தகராறு விபரீதம்: 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழப்பு; கணவர் காவல்நிலையத்தில் சரண்!

கூலிமில் குடும்பத் தகராறு விபரீதம்: 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழப்பு; கணவர் காவல்நிலையத்தில் சரண்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!