Sep 15, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கெடாவில் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் உயிரிழப்பு

Share:

கெடா மாநிலம், கூலிம், தாமான் டேசா கயங்கான் பகுதியில் நேற்று மாலை, நீர்த்தேக்கக் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற போது, அதில் தவறி விழுந்த 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுல் சின்ரிங் கூறுகையில், இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், சுங்கை கராங்கான் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்திற்கு நேரடி சாட்சிகள் யாரும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட நீர் தேக்க குளமானது சுமார் 10 அடி ஆழமும், 6 அடி அகலமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

Related News

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அன்வார்

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அன்வார்

கூலிமில் குடும்பத் தகராறு விபரீதம்: 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழப்பு; கணவர் காவல்நிலையத்தில் சரண்!

கூலிமில் குடும்பத் தகராறு விபரீதம்: 13 முறை கத்தியால் குத்தப்பட்ட 39 வயது பெண் உயிரிழப்பு; கணவர் காவல்நிலையத்தில் சரண்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!

தாமான் தேசா காயாங்கான் கால்வாயில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் — 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில்!

குவாரியில் லாரி மீது பாறை விழுந்து ஓட்டுநர் உயிரிழப்பு

குவாரியில் லாரி மீது பாறை விழுந்து ஓட்டுநர் உயிரிழப்பு

ஸ்ரீ பெட்டாலிங்கில் சந்தேகத்திற்கிடமான கிடந்த பெட்டி - வெடிகுண்டு தடுப்புப் படையால் அழிப்பு

ஸ்ரீ பெட்டாலிங்கில் சந்தேகத்திற்கிடமான கிடந்த பெட்டி - வெடிகுண்டு தடுப்புப் படையால் அழிப்பு

தெமர்லோவில் விநியோகிப்பாளரிடம் போதைப் பொருள், போலி துப்பாக்கி - போலீஸ் விசாரணை

தெமர்லோவில் விநியோகிப்பாளரிடம் போதைப் பொருள், போலி துப்பாக்கி - போலீஸ் விசாரணை