ஈப்போ, கெராமாட் பூலாய், கம்போங் கெபாயாங் பகுதியில் உள்ள குவாரி ஒன்றில், லாரி மீது பெரிய பாறை விழுந்ததில், லாரியை ஓட்டிச் சென்ற 53 வயது எம். சிவகுமார் உயிரிழந்தார்.
லாரிக்குள் சிக்கிய அவரை மீட்புப் படையினர் சடலமாக மீட்டனர்.
இன்று மாலை 5.18 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிம்பாங் பூலாய் மற்றும் கோப்பேங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மொத்தம் 12 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கற்கள் வெட்டும் பணியின் போது லாரி மீது பாறை விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவீன கருவிகளைப் பயன்படுத்தி சிவக்குமாரை மீட்ட தீயணைப்புப் படையினர், அவரது உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.








