சரவாக் மாநிலத்தில், 24 மணி நேர கடை ஒன்றில் ஆயுதங்களுடன் கொள்ளையடித்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட 5 சிறுவர்களை ஹென்ரி கர்னி சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக நலத்துறை தயாரித்த சமூக மற்றும் நடத்தை அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர், நீதிபதி நோர்ஹிஷாம் ஜாஃபார் இந்த உத்தரவைப் பிறப்பித்ததுள்ளார்.
18 வயதுடைய இருவரும் 21 வயது நிறைவடையும் வரை ஹென்ரி கர்னி பள்ளியில் இருக்க வேண்டும் என்றும், 14 முதல் 15 வயதுடைய மற்ற 3 சிறுவர்கள் 5 ஆண்டுகள் அங்கு தங்க வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஆயுதம் பயன்படுத்தி கூட்டாக கொள்ளையடித்த குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டதையடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 395-ஆவது பிரிவின் கீழும், ஆயுதம் ஏந்திக் கொள்ளை தொடர்பில் 397-ஆவது பிரிவின் கீழும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.








