Sep 14, 2026
Thisaigal NewsYouTube
தெமர்லோவில் விநியோகிப்பாளரிடம் போதைப் பொருள், போலி துப்பாக்கி - போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

தெமர்லோவில் விநியோகிப்பாளரிடம் போதைப் பொருள், போலி துப்பாக்கி - போலீஸ் விசாரணை

Share:

தெமர்லோ, பாயா கெலாடான் பகுதியில் 29 வயது விநியோகிப்பாளர் ஒருவரின் காரில் சுமார் 1,000 ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருளும், போலி கைத்துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி இரவு காரை சோதனையிட்ட போலீசார், எம்டிஎம்ஏ கலந்த 15 மில்லிலிட்டர் வேப் திரவம் மற்றும் சுமார் 6 கிராம் Methamphetamine என சந்தேகிக்கப்படும் தூளை பறிமுதல் செய்தனர்.

மேலும், ஓட்டுநர் இருக்கைக்கு கீழே கருப்பு நிற போலி கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெராவைச் சேர்ந்த அந்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஏற்கனவே ஒரு போதைப்பொருள் தொடர்பான குற்றப்பதிவு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் 39A(1) பிரிவின் கீழ் விசாரணைக்காக அவர் செப்டம்பர் 15 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News