Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தேவைக்கு அதிகமாக உற்பத்தி: நாட்டில் முட்டை விநியோகம் சீராக உள்ளது
தற்போதைய செய்திகள்

தேவைக்கு அதிகமாக உற்பத்தி: நாட்டில் முட்டை விநியோகம் சீராக உள்ளது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-

உள்நாட்டுச் சந்தையில் கோழி முட்டை விநியோகம் போதுமான அளவில் நிலையாக உள்ளது. உள்ளூர் உற்பத்தி இப்போது உள்நாட்டுத் தேவையை விட அதிகமாக உள்ளது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முட்டைக்கான மானியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய உற்பத்தி தரவு அடிப்படையில் உள்ளது.

கிரேடு ஏ, கிரேடு பி, மற்றும் கிரேடு சி முட்டைகளின் விநியோகம் சீராக இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News