Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த மேலும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த மேலும் இருவர் கைது

Share:

கடந்த வாரம் சனிக்கிழமை கோலாலம்பூர் மாநரில் எதிர்க்கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணி தொடர்பில் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெர்சத்து கட்சியின் பேரா மாநில இளைஞர் பிரிவின் நிர்வாக செயலாளர் ஃபுர்கான் ஹாகிமி மற்றும் ஷாஃபிக் அஸிஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ஹாரிஸ் இடாஹாம் ரஷிட் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேரணியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப் படத்திற்கு பிரம்படித் தண்டனைக் கொடுத்தது தொடர்பில் அவ்விருவரும் செய்யப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.

இத்துடன் பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Related News