Aug 7, 2026
Thisaigal NewsYouTube
அஞ்சல் வாக்கு முறை: தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு என குலசேகரன் தகவல்
தற்போதைய செய்திகள்

அஞ்சல் வாக்கு முறை: தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு என குலசேகரன் தகவல்

Share:

தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய பிராந்தியங்களுக்கு இடையேயான உள்நாட்டு அஞ்சல் வாக்குகள் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக சட்டத் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடரில் பேசிய அவர், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாக்காளர்களின் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுவதாகவும், இது அடுத்த ஆண்டு நிறைவடையும் என்றும் குறிப்பிட்டார்.

எனினும் அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும், தேர்தல் ஆணையத்தைப் பிரதமர்துறையின் கீழ் வைப்பதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரும் நல்ல யோசனையையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக குலசேகரன் மேலும் கூறினார்

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி