Jul 14, 2026
Thisaigal NewsYouTube
பாலத்தின் உயரக் குறியீடு தவறா? சிமெண்ட் கலவை லாரி மோதிய வீடியோவால் சமூக ஊடகங்களில் விவாதம்
தற்போதைய செய்திகள்

பாலத்தின் உயரக் குறியீடு தவறா? சிமெண்ட் கலவை லாரி மோதிய வீடியோவால் சமூக ஊடகங்களில் விவாதம்

Share:

மேம்பாலத்தின் அடியில் உள்ள உயரக் கட்டுப்பாட்டுத் தடுப்பு மீது சிமெண்ட் கலவை லாரி ஒன்று மோதும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

‘டேஷ்கேம் மலேசியா’ முக நூல் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், இன்று மதியம் 1.30 மணியளவில் லாரி ஒன்று பாலத்தின் அடியில் உள்ள தடுப்பு அமைப்பின் மீது மோதுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த விபத்து நடந்த துல்லியமான இடம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், அங்கு வைக்கப்பட்டுள்ள உயரக் கட்டுப்பாட்டுக் குறியீடு தவறாக இருக்கலாம் அல்லது முந்தைய விபத்துகளால் அந்தத் தடுப்பு வளைந்து சேதமடைந்திருக்கலாம் எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணி அமைச்சு மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Related News