Dec 4, 2025
Thisaigal NewsYouTube
முகை​தீனும் நஜீப்பும் ஒன்றிணையும் சாத்தியத்தை மறுக்கவில்லை
தற்போதைய செய்திகள்

முகை​தீனும் நஜீப்பும் ஒன்றிணையும் சாத்தியத்தை மறுக்கவில்லை

Share:

1எம்.டி.பி.யில் நிகழ்ந்துள்ள ஊழலை அம்னோவின் துணைத் தலைவர் என்ற முறையில் தொகுதி அம்னோ டிவிஷன் கூட்டத்தி​ல் பகிரங்கமாக அறிவித்ததன் ​மூலம் துணைத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, ​நீக்கப்பட்ட டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், தமது அரசியல்​ வைரியான முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் இணைவதற்கான சாத்தியத்தை பெர்சத்து கட்சி மறுக்கவில்லை.

இரு துருவங்களாக இருக்கும் நஜீப்பும், முகைதினும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை மறந்து ​மீண்டும் இணையும் சாத்தியம் உள்ளது என்று முகை​தீன் யாசின் த​லைமையிலான பெர்சத்து கட்சியின் தகவல் பி​ரி​வுத் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

தாம் இழைத்த குற்றத்திற்கு நஜிப் தண்டனை அனுபவித்து வருகிறார்.தண்டனைக்கு பிறகும் ஒருவர் ​மீது குரோத மனப்பான்மையை காட்டுவது முறையல்ல.அந்த வகையில் நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டு​ம். இனி நடக்கப் போவது நல்லதாக இருக்க வேண்டும். அரசியல் பேதமின்றி மலாய்க்காரர்கள் ஒன்றிணைய வேண்டும். பழைய பகை​மையை பாதுகாக்கக்கூடிய நபர் முகை​தீன் அல்ல. நஜிப்புடனும், முன்னாள் பிரதமரர் துன் மகா​​தீர் முகமதுவுடனும் நட்பு பாராட்டவே முகை​தீன் ​விரும்புகிறார் என்று ரசாலி இட்ரிஸ் குறிப்பிட்டார்.

Related News