Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில்திருக்குட நன்னீராட்டு விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில்திருக்குட நன்னீராட்டு விழா

நவ. 24-

சிரம்பான், Taman Tuanku Jaafar- ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் அண்ணாமலையார் பாதம் மற்றும் அர்த்தனாதிஸ்வரர் பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கான திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் ஆலய வருடாபிஷேக பெருவிழா வரும் நவம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.04 மணி முதல் 11.04 மணி வரை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு இன்று நவம்பர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.31 மணிக்கு முகூர்த்தகால் நடுதல் மற்றும் முளைப்பாலிகை இடுதல், விநாயகர் அனுமதி பெறுதல், விநாயகர் சிறப்பு திருமஞ்சனம் வேள்வி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

ஆலய நிர்வாகத்தினரின் முன்னிலையில் ஆலயத்தின் பிரதான குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் தலைமையில் இவ்வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து விநாயகர் மஹா அபிஷேகத்தைத் தொடர்ந்து தீபாரதனை பேரொளி வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றறது.

மாலை 6.31 மணிக்கு வாஸ்து பூஜை, பன்னிரு திருமுறை, முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருக்குட நன்னீராட்டு விழாவையொட்டி திருவண்ணாமலை, மலையடி வாரத்தில் உள்ள ஆதி பெரிய நாயகி அம்பாள், இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறார்..

இக்குட முழக்கு பெருவிழாவும், வருடாபிஷேக பெருவிழாவும், சிறப்பு பூஜைகளும் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்ர தேசிக சுவாமிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்படி நடத்தப்படுவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →