பெருமஹான் அவாம், ப்ரோஜெக் பெருமாஹான் ராக்யாட் எனப்படும் மக்கள் குடியிருப்புத் திட்ட வீடுகளின் வாடகையைச் செலுத்தாமல் அலட்சியம் செய்யப்பட்டால், அவ்வீடுகளுக்கு நீர் விநியோகத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் டிபிகேஎல் தடை செய்துள்ளது.
இதற்கு முன்னர் பிபிஆர் பெர்காசா, பிபிஆர் ஶ்ரீ அலாம் ஆகிய வீடமைப்புப் பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கையை எடுத்த டிபிகேஎல், தற்போது பிபிஆர் முஹிபாவுக்கும் விரிவு படுத்தி உள்ளது.
நினைவூட்டல் கடிதம் கொடுத்தும் வாடகையைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மன்றம் குறிப்பிட்டது.
செலுத்தப்படாமல் இருக்கும் வாடகையை முழுமையாக செலுத்திய பின்னரே அவ்வீடுகளுக்கு நீர் விநியோகிப்புக்கானத் தடை அகற்றப்படும் எனவும் டிபிகேஎல் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
அதே சமயம், மற்ற பிபிஆர் வீடமைப்புத் திட்டங்களிலும் இது குறித்த கண்காணிப்பு மேற்கொள்ளபடும் எனவும், தேவைப்படுமேயானால், அவ்வாறான கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படலாம் எனவும் அம்மன்றம் கூறியது.








