ஜோகூர் பாரு, செப்டம்பர்.24-
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, இரண்டாவது இணைப்பு நெடுஞ்சாலையில் இன்று காலையில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இரண்டாவது இணைப்பு நெடுஞ்சாலையின் தெற்கே நோக்கி, 1.7 ஆவது கிலோமீட்டரில் காலை 6.30 மணிக்கு நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் கடுமையான காயங்களுக்கு ஆளான 30 மற்றும் 31 வயதுடைய இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பவ இடத்திலேயே மாண்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.








