சிலாங்கூரில் இருக்கும் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் விளையாட்டு வசதிகளையும் மைதானங்களையும் தரம் உயர்த்த அம்மாநில அரசு
தலா ஒரு இலட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
மேலும், புட்சால் விளையாட்டுத் திடல் போன்ற புதிய விளையாட்டு
வசதிகளை அமைப்பதற்கு கூடுதலாக 2 இலட்ச வெள்ளியை
வெள்ளி ஒதுக்க்யுள்ளதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
அனைத்து தொகுதிகளிலும் உள்ள கால்பந்து திடல்களை சீரமைப்பதற்கும்
புதிதாக அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டமிரண்டரை இலட்சம் வெள்ளி நிதி இந்த மானியத்தில் உள்ளடங்கவில்லை என்று அவர் சொன்னார்.
சீரமைக்கும் பணிகளை சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.







