கோலாலம்பூர், நவம்பர்.03-
வரும் நவம்பர் 7 ஆம் தேதி மலேசிய ஊடகவியலாளர்கள் மன்றத்தின் முதலாவது ஆண்டுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆண்டுக் கூட்டத்தின் வாயிலாக அந்த மன்றத்தை வழிநடத்திச் செல்லவிருக்கும் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றனர்.
ஆண்டுக் கூட்டத்தின் போது தேர்தல் நடைபெறவிருக்கிறது. பத்திரிகை சாதனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நலன் சார்ந்த தரப்பினர்கள் இந்த ஆண்டுக் கூட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஊடகவியலாளர் மன்றத்தின் வாரியத்தில் 12 பொறுப்பாளர்கள் தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதர அறுவர் நியமனம் வழி பொறுப்பில் அமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








