விரைவில் நடைபெறவிருக்கும் திரெங்கானு, கெமாமான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை வேட்பாளராக நிறுத்துவதற்கு அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி செய்து வரும் 4 மாநிலங்களின் ஆலோசகராக துன் மகாதீர் முகமதுவை பாஸ் கட்சி அண்மையில் நியமித்துள்ளது. இதனைத் தொடர்ந்து துன் மகாதீரை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாக பாஸ் கட்சியின் பாதுகாப்பான தொகுதியான கெமாமான் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் 98 வயதான துன் மகாதீரை வேட்பாளராக நிறுத்துவதற்கு பாஸ் கட்சி முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் நெருக்கமமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
15 ஆவது பொதுத் தேர்தலில் கெமாமான் தொகுதியில் பாஸ் கட்சி பெற்ற வெற்றி செல்லாது என்று கடந்த வாரம் தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து பாஸ் கட்சியின் கோட்டையான கெமாமானில் துன் மகாதீரை களம் இறக்குவதற்கு அந்த மதவாத கட்சி உத்தேசித்துள்ளது.







