கோலாலம்பூர், அக்டோபர்.02-
காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தது மனித உரிமை மீறலாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அதில் பங்கேற்றுள்ள மலேசியர்களின் பாதுகாப்பும், கண்ணியமும் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Global Sumud Flotilla என்ற அக்கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு தாக்குதலுக்குத் தயாராக இருப்பது, மனித நேய ஆர்வலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் அன்வார் விமர்சித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், நிவாரண உதவிகளையும் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் உலகத்தின் மனசாட்சியையே அவமதிக்கிறது என்றும் அன்வார் சாடியுள்ளார்.








