பெக்கான், செப்டம்பர்.24-
பகாங் மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு உதவித் தொகையாக 200 முதல் 300 ரிங்கிட் வரையில் வழங்க அம்மாநில அரசு பரிசீலித்து வருகின்றது.
பகாங் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்கள் அளிக்கும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த உதவித் தொகை இருக்கும் என்று மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மாநில நிதிப் பிரிவு தற்போது சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும், முன்மொழியப்பட்ட இத்திட்டத்தையும் மதிப்பிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், இன்னும் இது குறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை என்பதையும் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வான் ரொஸ்டி குறிப்பிட்டுள்ளார்.








