குவாந்தான், நவம்பர்.05-
செம்பனைத் தோட்டம் ஒன்றில் குவிக்கப்பட்டு இருந்த செம்பனை மட்டைகளுக்கு அருகில் பெண்ணின் அழுகிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் பகாங், ஜாலான் காராக்-கோல பிலா சாலையின் 19 ஆவது மைல் தெலெமோங் தோட்டத்தில் அந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.
தோட்ட நிர்வாகத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து போலீசார் அவ்விடத்திற்கு விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சடலம் கிடந்த இடத்தில் மோப்ப நாய்களின் உதவியுடன் தடயவியல் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, உயிரிழந்த பெண்ணுக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் பச்சை நிற விளையாட்டு காற்சட்டை, Casio ரக கைக்கடிகாரம், கறுப்பு நிற செருப்பு, ஒரு சட்டை ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சவப் பரிசோதனைக்காக அந்தப் பெண்ணின் சடலம், குவாந்தான், தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.








