Feb 8, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய சந்தையில் நுழைகிறது இந்தியாவின் யுபிஐ (UPI) - பிரதமர் மோடி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மலேசிய சந்தையில் நுழைகிறது இந்தியாவின் யுபிஐ (UPI) - பிரதமர் மோடி அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை முறை விரைவில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் மலேசியா இடையிலான டிஜிட்டல் உறவை வலுப்படுத்த மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில் புதிய வழிகளை உருவாக்கி வருகிறது என்பதையும் இன்று ஸ்ரீ கெம்பாங்கானில் இந்திய சமுகத்துடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுயில் மோடி இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவின் யுபிஐ பணப் பரிவர்த்தனை வசதி விரைவில் மலேசியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக மோடி குறிப்பிட்டார்.

உலகில் நடைபெறும் நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதி அளவு இந்தியாவில் யுபிஐ தளம் மூலமாகவே நடைபெறுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவின் வளர்ச்சிக்கு இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முதலீடுகள் பெரிய அளவில் பங்களித்து வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த 'நம்பகமான கூட்டாண்மை' மேலும் வளரும் என்றும் தமது உரையில் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Related News