Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இலங்கைக்கான விசா கட்டணம் அகற்றப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

இலங்கைக்கான விசா கட்டணம் அகற்றப்பட்டுள்ளது

Share:

இலங்கைக்கு செல்வதற்கு மலேசியா உட்பட 7 நாடுகளின் சுற்றுப்பயணிகளுக்கு விசா கட்டணம் அகற்றப்பட்டுள்ளது. விசா விலக்களிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று தொடங்கி, அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் 7 நாடுகளுக்கு விசா விலக்களிப்பு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு மலேசிய சுற்றுப்பயணிகளுக்கு இலங்கை, 270 வெள்ளி விசா கட்டணத்தை விதித்து வந்தது. இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் சுற்றுப்பயணிகளை கவரும் வகையில் இலங்கை அரசாங்கம் இந்த தளர்வை வழங்கியுள்ளது.

Related News