Oct 1, 2026
Thisaigal NewsYouTube

நள்ளிரவில் பறந்த 'சூப்பர்மேன்கள்': 9 இளைஞர்கள் காவற்படை பிடியில் சிக்கினர்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நள்ளிரவில் பறந்த 'சூப்பர்மேன்கள்': 9 இளைஞர்கள் காவற்படை பிடியில் சிக்கினர்!

கோலாலம்பூர், டிசம்பர்.21-

கோலாலம்பூர் - சிரம்பான் நெடுஞ்சாலையில் நள்ளிரவு வேளையில் மோட்டார் சைக்கிள்களில் 'சூப்பர்மேன்' போல ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட ஒன்பது இளைஞர்களை ஓப் மோதோசிக்கால் சோதனை நடவடிக்கை வாயிலாகப் போக்குவரத்துக் காவற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களில் 17 வயதுடைய நான்கு இளையோர்களும் அடங்குவர். இவர்கள் எஸ்பிஆர் தேர்வை முடித்த கையோடு, தங்களின் உயிரைப் பணயம் வைத்து இந்த விபரீத விளையாட்டில் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவற்படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற பந்தய கும்பலை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், உரிமம் இல்லாதது, மோட்டார் சைக்கிளை சட்டத்திற்குப் புறம்பான மாற்றங்களை செய்தது எனப் பல்வேறு குற்றங்களுக்காக 18 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து குற்றப் புலனாய்வு, செயலாக்கப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார். "வேடிக்கை விபத்தாக மாறலாம்" என எச்சரித்துள்ள அவர், தங்கள் பிள்ளைகள் நள்ளிரவில் எங்கே செல்கிறார்கள் என்பதைப் பெற்றோர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →