Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டிசம்பர் இறுதி வரை காய்கறிகளின் விலை 50 விழுக்காடு உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிசம்பர் இறுதி வரை காய்கறிகளின் விலை 50 விழுக்காடு உயர்வு

டிச. 8-

நாட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மருவநிலை மாற்றத்தாலும் மழை காரணமாகவும் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. முன்னதாக, விவசாயிகள் தினமும் 100 கிலோ காய்கறிகளை அறுவடை செய்திருந்தனர். ஆனால், தற்போது 40 கிலோ மட்டுமே அறுவடை செய்கின்றனர்.

இவ்வாண்டு டிசம்பர் இறுதி வரையில் காய்கறிகளின் விலை 50 விழுக்காடு வரை உயர்வு நீடிக்கும். தக்காளி, கீரை, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது என கேமரன் மலை காய்கறித் தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் Datuk Chai Kok Lim தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஒரு கிலோ எடை கொண்ட தக்காளியின் விலை 4 ரிங்கிட்டில் இருந்து 6 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கடுகு கீரையின் விலை 3 ரிங்கிட்டில் இருந்து 8 ரிங்கிட் வரை அதிகரித்துள்ளதாக Datuk Chai சுட்டிக் காட்டினார்.

பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறி உற்பத்தி குறைந்துள்ளதால், விவசாயிகளின் வருமானமும் குறைந்துள்ளது. காய்கறி விலை உயர்வால் பயனீட்டாளர்கள் குறிப்பாக, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு 30 ரிங்கிட்டுக்கு வாங்கிய காய்கறிகளை இப்போது அடே விலையில் வாங்க முடியவில்லை என்று பல பயனீட்டாளர்கள் தெரிவிப்பதாக BULETIN TV3 செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →