Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் கொள்ளை
தற்போதைய செய்திகள்

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் கொள்ளை

Share:

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையின் காரை வேண்டுமென்றே டோயோட்டா கேம்ரி வாகனத்தில் மோதிய ஆடவன் ஒருவன் , பின்னர் அந்த ஆசிரியையை மடக்கி, ரொக்கப்பணம் உட்பட அந்த ஆசிரியைக்கு சொந்தமான 2 ஆயிரம் வெள்ளி ஆபரணங்களுடன் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பினான்.

இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் சண்டாக்கான், ஜம்பாத்தான் மேரா, ஜாலான் உத்தாரா சாலை சந்திப்பில் நிகழ்ந்தது. தனது காரை வாகனம் ஒன்று மோதியதை உணர்ந்து அந்த ஆசிரியை தனது காரை நிறுத்தியுள்ளார்.

அப்போது ஆசிரியையின் காரை நோக்கி ஓடி வந்த ஆடவன் ஒருவன், அந்த ஆசிரியையை தாக்குவதற்கு முற்பட்டுள்ளான். . அப்போது அந்த நபருடன் ஆசிரியை தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட போது, அவரை கீழே தள்ளிவிட்டு, காரின் முன் இருக்கையில் வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளான்.

எவ்வித காயத்திற்கு ஆளாகாத அந்த ஆசிரியை பின்னர் இது குறித்து சண்டக்கான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்