Oct 7, 2026
Thisaigal NewsYouTube

ஜாலூர் கெமிலாங் விவகாரம்: சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜாலூர் கெமிலாங் விவகாரம்: சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-

ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியைத் தவறாகக் கட்டிய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கேட்டுக் கொண்டார்.

தவறு இழைத்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இவ்விவகாரத்தை அமலாக்கத் தரப்பினரிடம் ஒப்படைத்து விட வேண்டுமே தவிர சட்டத்திற்குப் புறம்பாக வரம்பு மீறி செயல்பட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரை டத்தோ ஃபாமி வலியுறுத்தினார்.

இவ்விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள நினைவுறுத்தலைத் தொடர்ந்து இதனை அமலாக்கத் தரப்பினரிடமே மக்கள் ஒப்படைத்து விட வேண்டும் என்று அரசாங்கப் பேச்சாளரான டத்தோ ஃபாமி கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →