ஜோகூர் பாரு, டிசம்பர்.26-
பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதியதில் அதன் ஓட்டுநர் உட்பட நால்வர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 11.5 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் பாரு அருகில் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் 39 வயது பேருந்து ஓட்டுநர், இரண்டாவது ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் காயமுற்றதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.
தடுப்புச் சுவரை மோதியதால் பேருந்துக்கு கடும் சேதமும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








