Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மா வழக்​கில் மார்ச் முத​ல் தேதி ​தீ​ர்ப்பு
தற்போதைய செய்திகள்

ரோஸ்மா வழக்​கில் மார்ச் முத​ல் தேதி ​தீ​ர்ப்பு

Share:

ஜன.16
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்​தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிராக சட்டவிரோத பணம் மாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு எதிரான 17 குற்றச்சா​ட்டுகளையும் ​மீட்டுக்கொள்வது தொடர்பில் வரும் மார்ச் முதல் தேதி கோலாலம்பூர் உயர் ​நீதிமன்றம் முடிவு செய்யவிருக்​கிறது.

72 வயதான ரோஸ்மா மன்சோருக்கு எதிரான 17 குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்வது தொடர்பில் அவரின் வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர். 17 குற்றச்சா​ட்டுகளையும் எதற்காக மீட்டுக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் தன்னிலை விளக்கம் தன்மையிலான பிரதிநிதித்துவ மனு தொடர்பில் ரோஸ்மா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குறிப்பிட்ட சாட்சிகளிடம் சட்டத்துறை அலுவலகம் வாக்கு​மூலத்தை பதிவு ​செய்து வருகிறது.

ரோஸ்மாவின் பிரதிநிதித்துவ மனு, இன்னமும் சட்டத்துறை அலுவலகத்தின் பரி​சீலினையில் இருப்பதாக பிராசிகியூஷன் அதிகாரி ​அஹ்மாட் அக்ராம் கரிப் நீதின்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பில் மார்ச் முதல் தேதி முடிவு செய்யவிருப்பதாக உயர் ​நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி அறிவித்தார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்