May 24, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் மாமன்னருக்கு மதிப்பளியுங்கள்
தற்போதைய செய்திகள்

முன்னாள் மாமன்னருக்கு மதிப்பளியுங்கள்

Share:

குவாந்தன்,ஆகஸ்ட் 19

பஹாங் சுல்தான் மற்றும் முன்னாள் பேரரசருமான என் கணவர்அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா -விற்கு மதிப்பளியுங்கள் என்ற கோரிக்கையை தெங்கு அம்புவான் பஹாங், துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா முன்வைத்துள்ளார்.

கிளாந்தான், நெங்கிரிசட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின், முன்னாள் பேரரசரை அவமதிக்கும்படி பேசியது வருத்தமளிப்பதாக துங்கு அசிசா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பகாங் மென்டேரி பெசார் இன் முகநூல் கணக்கின் பதிவில், ’samdoria’ என்ற சமூக ஊடகக் கணக்கு ஒன்று“டான் ஸ்ரீ முஹ்யிதினை மதிக்கவும்” என்ற கருத்தைப் பகிர்ந்தை அடுத்து, துங்கு அசிசா “டோலாங் ரெஸ்பெக் (ஹார்மட்) சுவாமி சயா ராஜா சயா,” என்ற கருத்தைப் பகிர்ந்து முஹ்யித்தீன்-னின் செயலைச் சாடியுள்ளார்.

Related News